pcts_new
Untitled

கடந்த கால நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்புகளை இங்கு பார்வையிடலாம். இப்பக்கத்தில் அவ்வப்போது சேர்க்கப்படும் புதிய நிகழ்வுகளின புகைப்பட தொகுப்பினை பார்வையிட உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

பாரம்பரிய சந்தை

புனே சிட்டி தமிழ் சங்கம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடியது. புனே சிட்டி தமிழ் சங்கம் இதே நாளில் தான் 2002 ஆம் ஆண்டு பதிவு செய்யப் பட்டது. குறிப்பாக புனேவில் உள்ள தமிழ் தொழில்முனைவோர் மற்றும் பொதுவாக தமிழர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்பாரம்பரிய சந்தை எனும் கலாச்சார கண்காட்சியை புனே சிட்டி தமிழ் சங்கம், பொறியாளர்கள் நிறுவனம் (இந்தியா), புனேயில் நடத்தியது. இந்த முதல் முயற்சி எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. 1000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலாச்சார கண்காட்சி மற்றும் அங்காடிகளை கண்டு களித்தனர். ஆச்சி மசாலா, கோ-ஆப்டெக்ஸ், ராம்ராஜ் காட்டன், மலபார் தங்கம், விகேர் மூலிகை பொருட்கள், பிளைசோன் போன்றவை அங்காடிகளில் சில. மற்றும் பெண் தொழில்முனைவோரும் இருந்தனர். அவர்கள், சாயல் நகைகள், செட்டிநாடு புடவைகள், காலை உணவு தானியங்கள், அடுமனை பொருட்கள், ஓவியங்கள் மற்றும் பல வகை சிறு தொழில்களை முன் நிறுத்தினர். புனேயை சார்ந்த ஐயர் காபி ஏஜென்சி, ஐயர் கிரைண்டர், டேஸ்ட் ஆஃப் திருச்சி, பிளைசோன் உட்கடடமைப்பு நிறுவனம், விஜயா நிதி ஆலோசகர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் தமிழ் நடனக் கலைஞர்களின் நடனம் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் தமிழ் பாரம்பரிய சந்தைக்கு மெருகூட்டியது. இந்த நிகழ்ச்சி நாட்டுப்புற இசை மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனங்களை மையமாக வைத்து நடத்தப்பட்டது. மாலை கலை நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக பாரதி வித்யா பீட் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், திரு.ஜி.ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். தென்னிந்திய உணவு அரங்குகளின் சுவையான தமிழ் உணவுகள் பார்வையாளர்களை ருசிக்க வைத்தன. அன்றைய மழை நனைத்த மாலை வேளையின் மண் வாசனையோடு சூடாக குடித்த காபி நாவின் சுவையடுக்குகளில் இனிமை சேர்த்ததை எவரும்எளிதில் மறக்க இயலாது .

பாரம்பரிய சந்தை - 14 ஏப்ரல் 2019

  • 01
  • 02
  • 03
  • 04
  • 05
  • 06
  • 07
  • 08
  • 09
  • 10
  • 12
  • 02

 

Untitled Document