2002-ஆம் ஆண்டு உதயமான புனே சிட்டி தமிழ்ச்சங்கம், ஒரு மத சார்பற்ற, அரசியல் சார்பற்ற, சமூக அமைப்பு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்பாகும்.
சங்கத்தின் குறிக்கோள்கள்
- இளைஞர்களிடையே விளையாட்டில் ஆர்வத்தை பெறுக்கவும், அவர்களுக்கு தேவையான விளையாட்டு கருவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்வது.
- கல்வி, சமுதாய, தேசிய தொடர்புடைய நிகழ்ச்சிகளை நடத்துவது.
- பொது மக்களிடையே எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்துவது.
- தேசிய ஒருமைப்பாட்டிற்காக பல் வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது.
- பெண்களையும், இளைய தலைமுறையினரையும் ஒரு முன் மாதிரி குடிமக்களாக செயல்பட ஊக்குவிப்பது.
- சமுதாய மேம்பாட்டிற்காக பொது நிகழ்சிகள், கண்காட்சிகள், பட்டிமன்றங்கள், முகாம்களை நடத்துவது.
- ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியவர், காது கேட்க முடியாத, வாய் பேசமுடியாதவர்களின் மறு வாழ்வுக்கு உதவிடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்துவது.
- சமுதாயத்தில் நலிந்தோருக்கு விடுதிகள் மற்றும் சிறு குடில்கள் அமைத்து தருவது.
- தேசிய ஒருங்கிணைப்புக்காக பாடுபடுவது.
- சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஏழை மாணவர்களுக்கு தேவைப்படும் பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்குவது.
- தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவது, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பது.
- அரசியல் சார்பற்ற, மதசார்பற்ற அமைப்பாக விளங்குவது.
- தமிழ் கலாச்சாரம் மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை புனே வாழ் தென்னிந்தியர்களிடையே ஊக்குவிப்பது
- விபத்து, மருத்துவ உதவி, இறப்பு, திருமணம் முதலிய நிகழ்வுகளுக்கு, தென்னிந்திய சமூகத்தினருக்கு உதவிக்கரம் நீட்டுவது.
- தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நூலகம் தொடங்குவது.
- கலை, வரலாறு, இலக்கியம் மற்றும் பல துறை சார்ந்த திறமைகள் உள்ளோரை கண்டறிந்து ஊக்குவிப்பது.