pcts_new
Untitled

ஆண்டு கலாச்சார விழாக்கள் உறுப்பினர்களுக்கு இலவசமாக.

பிரதி ஆண்டும், கலாச்சார நிகழ்ச்சிகள் பல நமது சங்கத்து உறுப்பினர்கள் பங்குக்கொண்டு பயன்பெறும் வகையில் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. ஆண்டு முழுவ்தும். சீரான இடைவெளியில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி, நலவிரும்பிகளிடமிருந்து பெறப்படும் நன்கொடை மூலமாகவும், உபயதாரர்களின் உதவியாலும் மற்றும் நன்கொடையாளார் சலுகைச்ச்சீட்டு விற்பதின் மூலமும் திரட்டப்படுகின்றது.


ஆண்டுதோறும் நமது தமிழ்ச்சங்கம் கொண்டாடும் நிகழ்வுகள் குறித்த பட்டியலை இங்கு கீழே காணலாம்.



 மகாகவி பாரதியார் விழா


நமது சங்கத்தில் பிரதி ஆண்டும் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள், மகாகவி பாரதியாரை நினைவுகூர்ந்து அவரின் சிறப்புகளை போற்றும் வண்ணம், தனி விழாவாக கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சிந்தனைவாதியும், பேச்சாளருமான திரு.சுகி சிவம் போன்றவர்களின் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும், கவியரங்கமும் நடத்தப்படுகின்றது.




 தமிழர் திருநாள் – பொங்கல் விழா


பிரதி ஆண்டும், ஜனவரி மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுகிழமையன்று நமது சங்கத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகின்றது. நமது சங்கத்து உறுப்பினர் பலரும் அவர்தம் குடும்பத்துடன் பெருந்திரளாக விழாவுக்கு வந்து, நடனம், பாட்டு, பட்டிமன்றம், திருக்குறள் ஒப்புவித்தல் என நடக்கும் பலவித நிகழ்வுகளில் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டுவர். இறுதியில், நமது பாரம்பரியமிக்க அறுசுவை உணவு உறுப்பினர்களுக்கு பரிமாறப்பட்டு விழா இனிதே நிறைவு பெறும்.

ஆண்டு நாள்

நமது தமிழ்ச்சங்கம் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. அதை நினைவுக்கூறும் வண்ணமாக, பிரதி ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் “ஆண்டு நாள்” கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவில் நடைபெறும் பலவகையான நிகழ்வுகள் மூலம் உறுப்பினர் பலர் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்துவர்.

இதைத்தவிர, தென்னிந்தியாவின் புகழ் பெற்ற நாடக கலைஞர்களான கிரேஸி மோகன், டி.வி.வரதராஜன், மாப்பிள்ளை கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ர்யில் ப்ரியா குழு போன்றவர்களின் மேடை நாடகமும் ஆண்டுதோறும் இடம்பெறும். 

ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸில் பங்கேற்று வெற்றிப்பெற்ற பிரபல பாடகர்களை சென்னையிலிருந்து வரவழைத்து திரைப்படப்பாடல்களை பாடச்செய்யும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

மாற்றுக்குரலில் பேசி அபிநயம் காட்டுவதில் வல்லமை படைத்த கலைஞர்கள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்படுகின்றது.

பிரதி ஆண்டும், “குளிர்கால கூட்ட நிகழ்வாக” சங்கத்து உறுப்பினர் அவர்தம் குடும்பம், நண்பர்கள் ஒன்றுக்கூடி மகிழ்ச்சியுடன் கார்கால சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்யப்படுகின்றது.

நமது சங்கம், தமிழ் சமூகம் மற்றும் இதர சமூகத்தை சேர்ந்த உள்ளூர் மக்களின் பலவகையான திறமைகளையும் வெளிக்கொணர்வதில் அயராது பாடுப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


Untitled Document