கடந்த 22.01.23 ஞாயிற்றுக்கிழமை அன்று , நமது பாரம்பரியத்தை போற்றும்
வகையில், பொங்கல் விழா வழக்கம் போல் அதிவிமரிசையாக
கொண்டாடப்பட்டது.
விழாவின் சிறப்பு கருதி, அதற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ ஒன்றரை
மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டூவிட்டது. விழாவிற்கான
ஏற்பாடுகளை கவனித்த புதிதாக பொறுப்பேற்றுள்ள நமது சங்கத் தலைவர்
முனைவர். லோ. சத்தியநாராயணன் அவர்கள் சங்கத்து உறுப்பினர்களையும்
அவர்களது குடும்பத்தினரையும் ஊக்குவித்து பல்வேறு நிகழச்சிகளில்
பங்கேற்க வழிவகை செய்தார்.
புனேநகரின், வானோவ்ரி பகுதியில் அமைந்துள்ள மாகத்மா ஃபூலே
சன்ஸ்கிருத்தி பவனில் நடைபெற்ற இவ்விழாவின் சிறப்பு அம்சமாக
சங்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் பாண்டித்துரையின் சிலம்பாட்டம்
அமைந்ததோடு அவருடன் சேர்ந்து தமிழரல்லா இரண்டு சிறுமியர்
சிலம்பாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது. இது தவிர, பாடல்கள்,
பரதநாட்டியம், கவிதைகள், நடனங்கள், வயலின் இசை மற்றும் “ஸ்டார்ட்
மியூசிக்” என பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு
தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பிரமாண்டமாகவும் மனோரஞ்சகமாகவும் நடைபெற்ற இவ்விழாவானது
மகளிரின் கும்மியாட்டத்துடனும் தேசிய கீதத்துடனும் முடிவுற
அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப்பட்டது.
பொங்கல் விழா 2023 புகைப்படங்கள். குறிப்பிட்ட படத்தை நீண்ட நேரம் பார்க்க அப்படத்தின் மீது மவுசின் கர்சரை வைத்தால் போதும். அடுத்த படத்தை பார்க்க க்ர்சரை எடுத்தால் போதுமானது.