pcts_new
Untitled

கடந்த கால நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்புகளை இங்கு பார்வையிடலாம். இப்பக்கத்தில் அவ்வப்போது சேர்க்கப்படும் புதிய நிகழ்வுகளின புகைப்பட தொகுப்பினை பார்வையிட உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

பட்டிமன்றம்-நடுவர். திரு. கு. ஞானசம்பந்தம்

இந்த வருடம் கொரானா வைரஸ் நம் உலகையே ஆட்டிப் படைக்கிறது அல்லவா? தன் கையில் பல நிகழ்ச்சிகள் வைத்திருந்தாலும் புனே சிட்டி தமிழ்ச் சங்கத்தால் அதை நடத்த முடியாதபடி திரையரங்குகள் மூடப்பட்டன. நம் உறுப்பினர்களுக்கு என்ன செய்யலாம் என்று குழு உறுப்பினர்கள் யோசித்து அதை ஒரு சவாலாக எடுத்து முதலில் இணைய வழி பட்டிமன்றம் நடத்த முடிவெடுத்தார்கள்.

நடுவர் ஒருவரை தேடிய போது பேராசிரியர் திரு கு. ஞானசம்பந்தம் இதை நடத்த மட்டுமில்லாமல் அதனையும் முழுமையாக இணையதளத்தில் கொண்டுவர முன் வந்தார். பேச்சாளர்களாக நம் சங்கத்தின் உறுப்பினர்கள் திருமதி. மைதிலி கிருஷ்ணமூர்த்தி, திருமதி. ஜானகி ஸ்ரீதரன், திருமதி..அருள்மொழி சத்யநாராயணன், திருமதி. விஜயலட்சுமி சுப்பிரமணியண், திரு .சத்யநாராயணன் தவிர திரு. ராஜேஷ் முன்வந்தார்கள்.

ஞாயிறு ஜூன் 7, 2020 அன்று மாலை 6.15-க்கு தொடங்கியது “வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது பணமா அல்லது படிப்பா” என்ற தலைப்பில் இந்த நடுவர் மத்தியில் சில சமயம் காரசாரமாகவும் சில சமயம் நகைச்சுவையுடனும் இந்த நிகழ்ச்சி நடந்தது.

90 நிமிடத்திற்கு பிறகு நடுவர் தன் பாணியில் தன் முடிவைத் தெரிவித்தார் இந்த மாதிரி கடுமையான நேரத்தில் புது யோசனையுடன் நடத்திய புனே சிட்டி தமிழ்ச்சங்கத்தை மிகவும் மெச்சினார்.

இது எங்கள் முதல் முயற்சியாக இருந்தாலும் இந்த புது முறையையும் நடத்திய விதத்தையும் பற்றி பலர் தங்கள் எண்ணத்தை அனுப்பி உள்ளார்கள்.

 

Untitled Document