pcts_new
Untitled

கடந்த கால நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்புகளை இங்கு பார்வையிடலாம். இப்பக்கத்தில் அவ்வப்போது சேர்க்கப்படும் புதிய நிகழ்வுகளின புகைப்பட தொகுப்பினை பார்வையிட உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

சுற்றுலா - அஜின்க்யா பொழுது போக்கிடம்.

ஒரு நாள் சுற்றுலா.

இந்த ஒரு நாள் சுற்றுலா பூனே சிடி தமிழ் சங்கத்தின் செப்டம்பர் மாத நிகழ்ச்சி.
சென்ற இடம்: அஜின்க்யா பொழுது போக்கிடம்.( Resort).
அந்த பொன்னான நாள் : செப்டம்பர் 30, ஞாயிறு தினம்.

      காலை 7 மணிக்கு பேருந்தில் அமர்ந்தோம்.சுமார் 2 மணி நேர பயணம்.அஜின்க்யா பொழுது போக்கிடம் வந்து சேர்ந்தோம். உள்ளே நுழைந்ததும கண் கொள்ளா காட்சி. விரிந்து பரந்த ஏரி. அங்கங்கே மாமரங்கள். பூத்து குலுங்கும் செடிகள்.

ஏரி கரையின் மரங்கள் சாட்சி
எங்கள் உள்ளம் கொண்ட மகிழ்ச்சி!
.
ரம்யமான சூழ்நிலை, சூடான, சுவையான காலை உணவு, தேநீர்.
ஆங்காங்கே இளைப்பாற, ஓட்டு கூரையுடன், ஏரியை பார்த்த அமரும் இடங்கள்.மதிய உணவு நேரம் வரை பல விதமான விளையாட்டுக்கள்
.பல உறுப்பினர்களின் வயதையும் மனதில் கொண்டு  திறம்பட திட்டமிட பட்டவை.

வயதா ? யார் அதை நினைத்தார்கள் ? ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும் குழந்தை அல்லவா வெளியில் வந்தது. ஓடி, ஆடி , விளையாடி, மழையிலும் ஆடி களித்தனர்.( Rain dance).

பின், ருசியான பகல் உணவு.மறுபடியும் விளையாட்டு.வித்தியாசமான ஹவுஸி விளையாட்டு.பல பல பரிசுகள்.பொழுது போனதே தெரியாமல் மாலை ஆகி விட்டது. சுடச்சுட பக்கோடாவும் தேநீரும்..பின் மறுபடியும் பேரூந்தில் பயணம் இல்லம் நோக்கி.

மிக உல்லாசமாக, கவலைகள் மறந்து நண்பர்களோடு மகிழ்ந்திருந்தோமே. இவ்வளவு அழகான, இனிய தினத்தை நமக்கு அளித்த பூனே சிடி தமிழ் சங்கத்தை,
என்ன சொல்லி போற்றுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
சுருக்கச் சொன்னால்,
ஒரு நாள் சுற்றுலா!
என்றென்றும் கண்ணிலா!
கொள்ளை கொண்ட மனதிலா!
விவரிக்க சொல் இலா!

அஜின்க்யா பொழுது போக்கிடம் - 2018

 

Untitled Document