pcts_new
Untitled

கடந்த கால நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்புகளை இங்கு பார்வையிடலாம். இப்பக்கத்தில் அவ்வப்போது சேர்க்கப்படும் புதிய நிகழ்வுகளின புகைப்பட தொகுப்பினை பார்வையிட உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

சாந்தி வனம் சுற்றுலா - 2016

சுற்றுலா - சாந்திவனம்

நமது சங்கம், பிரதி வருடமும், தம் உறுப்பினர் எல்லோரும் ஒருவொருக்கொருவர் கலந்து உறவாடி, பலவிதமான உல்லாச விளையாட்டுகளில் பங்கேற்று மகிழவும், தங்கள் தமிழை புதுப்பித்துக்கொள்ளவும் அவர்களுக்கு அதற்கு தேவையான காலத்தையும், பொருத்தமான சூழலையும், இடத்தையும் அமைத்து தருவதற்கு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில், இந்த வருடம், நமது சங்கம், கடக்கவாசலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சாந்திவனம் ஓய்வு விடுதிக்கு சுற்றுலாவாக தம் உறுப்பினர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தது. அந்த விடுதி, எல்லா பருவத்தினற்கும் ஏற்றவாறு பல பொழுதுப்போக்கு அம்சங்களையும், ரம்மியமான சூழலையும், உண்டு மகிழ்வதற்கு சுவையான, மணம்கமழும் பலவிதமான உணவு வகைகளையும் குறைவில்லாமல் கொண்டிருந்தது.

இந்த சுற்றுலாவில் சுமார் 78 உறுப்பினர்கள் கலந்துகொண்டதால், அவர்களின் பயண வசதிக் கருதி, 2 பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் காலை 9.30 மணிக்கு சாந்திவனம் சென்றடைந்த நமது உறுப்பினர்களுக்கு, சுவையான இட்லி, போஹா மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு கமகமக்கும் காபி (அ) ஆவிபறக்கும் தேநீருடன் கூடிய காலை சிற்றுண்டியுடன், அந்த நாள் உற்சாகமாகவும் குதூகலமாகவும் தொடங்கியது. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றவாறு பல விளையாட்டுகளும், உடல் வலிமைமிக்கோர்க்கென துணிச்சல் மிக்க பல கள விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சுமார் 2 மணி நேரத்திற்கு நடைப்பெற்ற இவ்விளையாட்டுகளின் இடைவேளையில் எல்லோரும் ஆவலுடனும் எதிர்பார்த்திருந்த மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவைமிக்க பலவகை உணவு பட்டியலை கொண்டிருந்த மதிய உணவில், பர்லேலி வாங்கியும், ஜிலேபியும் அனைவரையும் கவர்ந்த உணவு வகையாக இருந்தது. மதிய உணவிற்கு பின், உறுப்பினர்கள், விடுதியையும் அதன் பொழுதுப்போக்கு அம்சங்களையும் அறிவதற்கு, சுற்றிப்பார்க்க சென்றனர். சிறுவர் பூங்கா, பறவைகள் அரங்கம், மீன் காட்சியகம், கடல் கிளிஞ்சல்களின் கண்காட்சி, அறிவியல் மாதிரிக்கள், முயல் வீடு, கயிறு ஏறுதல், பாயும் நரிகள், புர்மா பாலம் போன்ற பல பொழுதுப்போக்கு அம்சங்கள் அங்கு உள்ளன.

இந்த இடைவேளை நேரம் ஒரு சிலருக்கு அடுத்த கட்ட வேடிக்கை விளையாட்டு சுற்றுகளில் பங்கேற்கும் முன் தேவைப்படும் ஓய்வு நேரமாக இருந்தது. சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற பல விளையாட்டுகள் எழுச்சி மிக்க நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அது சமயம் நெருங்கிய தேநீர் நேரத்தில், சுவைமிக்க பஜ்ஜியும், தேநீரும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

எந்த ஒரு நிகழ்வும் நிறைவுக்கு வருவதுப்போல், இந்த சுற்றுலாவும், இனிய நினைவுகளோடு, உறுப்பினர்களின் இல்லம் நோக்கிய பயணத்துடன் இனிதே நிறைவு பெற்றது. இச்சுற்றுலாவின் இனிய நினைவுகளில் மகிழ..... இதோ உங்களுக்காக இங்கே சில புகைப்படக்காட்சிகள்!.......

Untitled Document